சென்னையில் வலைப்பயிற்சியைத் தொடங்கிய இந்திய வீரர்கள்! (படங்கள்)

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.
சென்னையில் வலைப்பயிற்சியைத் தொடங்கிய இந்திய வீரர்கள்! (படங்கள்)

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.  முதல் போட்டி வரும் 5 - ஆம் தேதியும், 2 - ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 - ஆம் தேதியும் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்டைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. எனினும் 2-வது டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். 

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு சென்னை வந்த இங்கிலாந்து அணியினர், கரோனா தடுப்பு தனிமை முகாமில் இருந்தனர். மேலும், அனைவருக்கும் 3 கட்டங்களாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் வலைப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இங்கிலாந்து வீரர்களுக்கு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை வலைப்பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியினரும் கரோனா தடுப்பு தனிமை முகாமை நிறைவு செய்த நிலையில், அவர்களுக்கும் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் கரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் நேற்று மாலையில் சாதாரண பயிற்சியில் ஈடுபட்டனர். 

இந்திய அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் கடைசி டெஸ்டில் விளையாடாத பும்ராவும் அஸ்வினும் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். வலைப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்ற நிலையிலும், இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்ற நிலையிலும் களமிறங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com