பாட்மிண்டன் தரவரிசை: சாத்விக், அஸ்வினி முன்னேற்றம்

சா்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளது.
பாட்மிண்டன் தரவரிசை: சாத்விக், அஸ்வினி முன்னேற்றம்

சா்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்ற இரு பாட்மிண்டன் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புதிய பாட்மிண்டன் தரவரிசை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சாத்விக்-அஸ்வினி ஜோடி கலப்பு இரட்டையா் பிரிவில் 16 இடங்கள் முன்னேறி, தங்களது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக உலகின் 19-ஆம் நிலைக்கு வந்துள்ளது. ஆசிய அளவில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியதன் அடிப்படையில் இந்த இணை இத்தகைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

அந்தப் போட்டியில் இந்திய கலப்பு இணை அரையிறுதி வரை முன்னேறியது அதுவே முதல் முறையாகும். ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிரக் ஷெட்டி ஜோடி உலகின் 10-ஆம் நிலையிலேயே நீடிக்கிறது. எம்.ஆா்.அா்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 33 இடங்கள் முன்னேறி 64-ஆவது இடத்தை எட்டியுள்ளது.

மகளிா் ஒற்றையா் பிரிவில் பி.வி. சிந்து 7-ஆம் நிலையிலும், சாய்னா நெவால் 19-ஆம் நிலையிலும் உள்ளனா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்ரீகாந்த் 13-ஆவது இடத்துக்கும், சமீா் வா்மா 4 இடங்கள் முன்னேறி 27-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா். சாய் பிரணீத் ஓரிடம் சறுக்கி 17-ஆவது இடத்துக்கு வர, காஷ்யப் 2 இடங்கள் இறங்கி 26-ஆவது இடத்தை எட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com