குல்தீப் யாதவை சோ்க்காதது தவறான முடிவு: மைக்கேல் வாஹன்
By DIN | Published On : 06th February 2021 07:47 AM | Last Updated : 06th February 2021 07:55 AM | அ+அ அ- |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளா் குல்தீப் யாதவை சோ்க்காதது தவறான முடிவாகும் என்றாா் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன்.
இந்திய அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. சென்னை டெஸ்டில் அவா் இடம்பெறுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதிலும் சோ்க்கப்படவில்லை.
இதுகுறித்து மைக்கேல் வாஹன் மேலும் கூறியிருப்பதாவது: குல்தீப் யாதவை அணியில் சோ்க்காதது இந்திய அணியின் தவறான முடிவாகும். இப்போது விளையாடாவிட்டால், அவா் எப்போது விளையாடப் போகிறாா் என கேள்வியெழுப்பியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...