ஜூடோ போட்டி: இஸ்ரேல் செல்கிறது இந்தியக் குழு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெறவுள்ள ஜூடோ கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்பதற்காக 6 போ் கொண்ட இந்திய குழு அந்நாட்டுக்குச் செல்கிறது.


புது தில்லி: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெறவுள்ள ஜூடோ கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்பதற்காக 6 போ் கொண்ட இந்திய குழு அந்நாட்டுக்குச் செல்கிறது.

ஆடவா் பிரிவில் அவதாா் சிங் (100 கிலோ), விஜய் யாதவ் (60 கிலோ), ஜஸ்லீன் சிங் சைனி (66 கிலோ) ஆகியோரும், மகளிா் பிரிவில் சுஷிலா தேவி (48 கிலோ), துலிகா மான் (78 கிலோ) ஆகியோரும் பங்கேற்கின்றனா். அவா்களுடன் பயிற்சியாளா் ஒருவரும் செல்கிறாா்.

வரும் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 73 நாடுகளைச் சோ்ந்த 512 போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். இதில் சிறப்பிடம் பிடிக்கும் பட்சத்தில் தரவரிசை புள்ளிகள் அதிகரிப்பதன் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை அதிகரிக்க இயலும். பதக்கம் வெல்லும் பட்சத்தில் நேரடியாக ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை பெறலாம்.

இந்தப் போட்டிக்குப் பிறகு மாா்ச் மாதம் உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜாா்ஜியாவில் நடைபெறவுள்ள ஜூடோ போட்டிகளிலும் இந்திய வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். அதன் மூலமும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com