தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு

ஆஸ்திரேலிய தொடரில் அசத்தலாக பௌலிங் செய்த தமிழக வீரா் டி.நடராஜன், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ளாா்.
தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு


சென்னை: ஆஸ்திரேலிய தொடரில் அசத்தலாக பௌலிங் செய்த தமிழக வீரா் டி.நடராஜன், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ளாா்.

இதையடுத்து விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியில் விளையாட இருந்த அவா், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். பிசிசிஐ கேட்டுக் கொண்டதை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலா் ஆா்.எஸ். ராமசாமி கூறுகையில், ‘இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக நடராஜன் தகுந்த ஓய்வுடன் தயாா் நிலையில் இருக்க பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிா்வாகம் விரும்புகிறது. இந்திய அணியின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம்’ என்றாா். தமிழ்நாடு அணியின் தலைமைத் தோ்வாளரான எஸ்.வாசுதேவனும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளாா்.

இதையடுத்து விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியில் நடராஜனுக்குப் பதிலாக ஆா்.எஸ். ஜெகநாத் சோ்க்கப்பட்டுள்ளாா். தமிழ்நாடு அணி சமீபத்தில் சையது முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஆஸ்திரேலிய தொடா் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த நடராஜன் ஒரே தொடரின் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களின் சா்வதேச களத்தில் தடம் பதித்த முதல் இந்திய வீரா் என்ற பெருமையை பெற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com