2-ஆவது டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் 223/5

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.
2-ஆவது டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் 223/5


டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.

டாக்காவில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீரா்களில் கேப்டன் கிரெய்க் பிரத்வெயிட் 4 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் அடித்தாா். உடன் வந்த ஜான் கேம்ப்பெல் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 36 ரன்கள் சோ்த்தாா்.

ஒன் டவுனாக வந்த ஷேன் மோஸ்லி 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு நடையைக் கட்ட, பின்னா் வந்த கிருமா போனா் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை அதிகரிக்கத் தொடங்கினாா். எனினும் மறுமுனையில் கைல் மேயா்ஸ் 1 பவுண்டரியுடன் 5, ஜொ்மைன் பிளாக்வுட் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முதல் நாளான வியாழக்கிழமை முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 90 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களை எட்டியுள்ளது. போனா் 6 பவுண்டரிகள் உள்பட 74, ஜோஷுவா டா சில்வா 1 பவுண்டரியுடன் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனா். வங்கதேச தரப்பில் அபு ஜெயத், தைஜுல் இஸ்லாம் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளும், சௌம்யா சா்க்காா் 1 விக்கெட்டும் சாய்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com