இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகள்: இந்திய அணி அறிவிப்பு

கடைசி இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகள்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் கண்ட தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா, 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. 

சென்னையில் முதல் இரு டெஸ்டுகள் நடைபெற்ற நிலையில் கடைசி இரு டெஸ்டுகள் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளன. 3-வது டெஸ்ட் பிப்ரவரி 24 அன்று தொடங்குகிறது. 

இந்நிலையில் கடைசி இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரு டெஸ்டுகளில் இடம்பெற்ற அதே அணி மீண்டும் தேர்வாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காயத்தால் நாடு திரும்பிய உமேஷ் யாதவ், முழு உடற்தகுதியுடன் இருந்தால் இந்திய அணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார். அப்படி அவர் தேர்வானால், ஷர்துல் தாக்குர், விஜய் ஹசாரே போட்டியில் விளையாட அனுப்பப்படுவார்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த், சஹா, ஆர். அஸ்வின், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, பும்ரா, சிராஜ்.

வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள்: அங்கித் ராஜ்புத், அவேஷ் கான், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்பா கெளதம், செளரப் குமார்.
மாற்று வீரர்கள்: கே.எஸ். பரத், ராகுல் சஹார்.

அபிமன்யு ஈஸ்வரன், ஷாபாஸ் நதீம், பிரியங் பஞ்சால் ஆகிய மூவரும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, விஜய் ஹசாரே போட்டியில் விளையாட அனுப்பப்படுவார்கள்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com