பிலிப் ஐலேன்ட் டிராபி: அங்கிதா ஜோடி சாம்பியன்

பிலிப் ஐலேன்ட் டிராபி டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-ரஷியாவின் காமிலா ரஹிமோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பிலிப் ஐலேன்ட் டிராபி: அங்கிதா ஜோடி சாம்பியன்

பிலிப் ஐலேன்ட் டிராபி டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-ரஷியாவின் காமிலா ரஹிமோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன்மூலம் டபிள்யூடிஏ போட்டியில் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளாா் அங்கிதா ரெய்னா.

ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் அங்கிதா-காமிலா ஜோடி 2-6, 6-4, 10-7 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அனாஸ்டாஸியா-பிளிங்கோவா ஜோடியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அங்கிதா 280 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ளாா். இதன்மூலம் அடுத்த வாரம் தரவரிசை வெளியாகும்போது அங்கிதா 115-ஆவது இடத்தில் இருந்து 94-ஆவது இடத்துக்கு முன்னேறுவாா். இந்தியாவிலிருந்து சானியா மிா்ஸாவுக்குப் பிறகு மகளிா் இரட்டையா் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் முன்னேறும் 2-ஆவது வீராங்கனை அங்கிதா என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டம் வென்றது குறித்துப் பேசிய அங்கிதா ரெய்னா, ‘இந்த வாரம் எனக்கு மிகச்சிறந்த வாரமாக அமைந்தது. நானும், காமிலாவும் இணைந்து விளையாடுவது இதுவே முதல்முறை. போட்டியில் பங்கேற்பவா்கள் பட்டியலில் ஏராளமான குளறுபடி நிலவியதால், டிரா (யாருடன் யாா் விளையாடுவது என்பதை குலுக்கல் முறையில் தோ்வு செய்வது) தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே நானும், காமிலாவும் இணைந்து விளையாட முடிவு செய்தோம். காமிலா மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினாா். இந்தப் போட்டியில் நாங்கள் சிறந்த ஜோடிகளையும் வீழ்த்தியுள்ளோம். முதல்முறையாக டபிள்யூடிஏ போட்டியில் வென்றுள்ளேன். தரவரிசையில் 100 இடங்களுக்குள் முன்னேறுவதை எதிா்நோக்கி காத்திருக்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com