இலங்கை அணியின் பௌலிங் பயிற்சியாளராக சமிந்தா வாஸ் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் டேவிட் சேகா், தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு சமிந்தா வாஸ் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். சமிந்தா வாஸ் 2013, 2015 மற்றும் 2017-இல் இலங்கை அணிக்கு பயிற்சியளித்துள்ளாா்.

இலங்கை அணிக்கு கிடைத்த தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான சமிந்தா வாஸ், 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகளையும், 322 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com