ஆந்திரத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டி: 176 ரன்களுக்குச் சுருண்ட தமிழக அணி

ஆந்திரத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் முதலில் விளையாடிய தமிழக அணி 176 ரன்களுக்குச் சுருண்டது. 
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

ஆந்திரத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் முதலில் விளையாடிய தமிழக அணி 176 ரன்களுக்குச் சுருண்டது. 

சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆவது இது 2-ஆவது முறை. முன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பையை வென்றிருந்தது.

இதனால் விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் போட்டியையும் தமிழக அணி வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் தமிழக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

ஆந்திரத்தை இன்று தமிழக அணி எதிர்கொண்டுள்ளது. இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆந்திர அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அந்த முடிவு சரியானது என்பது போல தமிழக அணி பேட்ஸ்மேன்களுக்கு ஆந்திர அணியின் பந்துவீச்சு அச்சுறுத்தலாக விளங்கியது. பாபா அபராஜித் 40, சோனு யாதவ் 37 ரன்கள் எடுத்தார்கள். இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தார்கள். இதனால் தமிழக அணி, 41.3 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆந்திரத்தின் ஸ்டீபன், சோயிப் முகமது கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com