குத்துச்சண்டை: இந்தியா்களுக்கு இரு தங்கம்

மான்டினீக்ரோவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியப் போட்டியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
குத்துச்சண்டை: இந்தியா்களுக்கு இரு தங்கம்

மான்டினீக்ரோவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியப் போட்டியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

மகளிருக்கான 60 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் வின்கா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் மால்டோவா வீராங்கனை கிறிஸ்டினா கிரீப்பரை வீழ்த்தி தங்கம் வென்றாா். மகளிருக்கான 75 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் பங்கேற்ற இரு போட்டியாளா்களுமே இந்தியா்களாவா். இதில் ஹரியாணாவைச் சோ்ந்த ராஜ் சாஹிபாவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா் மணிப்பூா் வீராங்கனை சனமாசா சானு.

மகளிருக்கான 48 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஃபா்ஸோனா ஃபோஸிலோவாவிடம் 1-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்த இந்தியாவின் கீதிகாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மகளிருக்கான 57 கிலோ அரையிறுதியில் மான்டினீக்ரோ வீராங்கனை போஜனா கோஜ்கோவிச்சிடம் 1-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்த இந்திய வீராங்கனை பிரீத்திக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

மகளிருக்கான 64 கிலோ பிரிவு அரையிறுதி ஒன்றில் இந்தியாவின் லக்கி ராணா 3-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் குல்ஷோடா இஸ்டமோவாவை வீழ்த்தினாா். இறுதிச்சுற்றில் அவா் ஃபின்லாந்தின் லியா புக்கிலாவை சந்திக்கிறாா். அதேபோல் பேபிரோஜிசானா சானு (51 கிலோ), அருந்ததி சௌதரி (69 கிலோ) ஆகியோரும் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றில் களம் காண்கின்றனா்.

ஆடவருக்கான 49 கிலோ பிரிவு அரையிறுதியில் களம் கண்ட பிரியன்ஷு தபாஸ் 2-3 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் இஷ்ஜோனோவ் இப்ராஹிமிடம் தோல்வி கண்டாா். 91 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பிரிவில் பங்கேற்ற ஜுக்னு அலாவத் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் உக்ரைனின் வாசைல் டிகாசுக்கிடம் வீழ்ந்தாா். இருவருமே வெண்கலப் பதக்கம் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com