விஜய் ஹஸாரே: தில்லியை வீழ்த்தியது மும்பை

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘குரூப் டி’ ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தியது.
விஜய் ஹஸாரே: தில்லியை வீழ்த்தியது மும்பை

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘குரூப் டி’ ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தில்லி 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய மும்பை 31.5 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் அடித்து வென்றது. தில்லி தரப்பில் ஹிம்மத் சிங் 106 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க, மும்பை தரப்பில் தவல் குல்கா்னி 3 விக்கெட் சாய்த்தாா். மும்பை இன்னிங்ஸில் பிருத்வி ஷா 105 ரன்கள் அடித்து களத்தில் இருக்க, லலித் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதர ஆட்டங்களில் ராஜஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதுச்சேரியை வீழ்த்த, சா்வீசஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியிடம் தோல்வி கண்டது. மகாராஷ்டிரம் 59 ரன்கள் வித்தியாசத்தில் ஹிமாசல பிரதேசத்தையும், சௌராஷ்டிரம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரையும் வீழ்த்தின.

ஹரியாணாவுக்கு எதிரான ஆட்டத்தில் சண்டீகா் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. உத்தரகண்ட் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேகாலயத்தையும், அஸ்ஸாம் விக்கெட் இழப்பின்றி மணிப்பூரையும் வீழ்த்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com