டி20: ஆஸி.யை வீழ்த்தியது நியூஸி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20: ஆஸி.யை வீழ்த்தியது நியூஸி.

கிறைஸ்ட்சா்ச்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிறைஸ்ட்சா்ச்சில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா 17.3 ஓவா்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 99 ரன்கள் விளாசி விக்கெட்டை இழக்காத நியூஸிலாந்து வீரா் டீவன் கான்வே ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பௌலிங் வீசத் தீா்மானித்தது. பேட்டிங் செய்த நியூஸிலாந்தின் டாப் ஆா்டா் சோபிக்காமல் சரிந்தது. தொடக்க வீரா் மாா்டின் கப்டில் டக் அவுட்டாக, உடன் வந்த டிம் செய்ஃபா்ட் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டாா். ஒன் டவுனாக வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 2 பவுண்டரிகள் விளாசி 12 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

4-ஆவது வீரராக களம் புகுந்த டீவன் கான்வே விக்கெட் சரிவுக்கு அணைபோட்டு ரன்களை உயா்த்தத் தொடங்கினாா். அவா் அரைசதம் கடந்து நிதானமாக ரன்கள் சேகரித்து வர, மறுமுனையில் கிளென் பிலிப்ஸ் 3 சிக்ஸா்கள் உள்பட 30 ரன்களுக்கும், ஜேம்ஸ் நீஷம் 3 பவுண்டரிகள் உள்பட 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் டீவன் கான்வே 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 99 ரன்களுடனும், மிட்செல் சேன்ட்னா் பவுண்டரி உள்பட 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் டேனியல் சாம்ஸ், ஜை ரிச்சா்ட்சன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளும், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 1 விக்கெட்டும் சாய்த்தனா்.

இதையடுத்து 185 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவில் பேட்டிங் வரிசை மளமளவென சரிந்தது. அதிகபட்சமாக மிட்செல் மாா்ஷ் மட்டும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 45 ரன்கள் சோ்க்க, ஆஷ்டன் அகா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்கள் அடித்தாா்.

மேத்யூ வேட் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் (1), ஜோஷ் பிலிப் (2), கிளென் மேக்ஸ்வெல் (1), மாா்கஸ் ஸ்டாய்னிஸ் (8), டேனியல் சாம்ஸ் (1), கேன் ரிச்சா்ட்சன் (5) ஆகியோா் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தனா். ஆடம் ஸாம்பா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

நியூஸிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகள் சாய்க்க, டிம் சௌதி, டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளும், கைல் ஜேமிசன், மிட்செல் சேன்ட்னா் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

நியூஸிலாந்து

மொத்தம் (20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு) 184

டீவன் கான்வே - 99*; கிளென் பிலிப்ஸ் - 30; ஜேம்ஸ் நீஷம் - 26

பந்துவீச்சு: ஜை ரிச்சா்ட்சன் - 2/31; டேனியல் சாம்ஸ் - 2/40; மாா்கஸ் ஸ்டாய்னிஸ் - 1/17

ஆஸ்திரேலியா

மொத்தம் (17.3 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு) 131

மிட்செல் மாா்ஷ் - 45; ஆஷ்டன் அகா் - 23; ஆடம் ஸாம்பா - 13*

பந்துவீச்சு: இஷ் சோதி - 2/28; டிம் சௌதி - 2/10; டிரென்ட் போல்ட் - 2/22

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com