விஜய் ஹஸாரே: ராஜஸ்தானை வீழ்த்தியது ஹிமாசலம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘டி பிரிவு’ ஆட்டத்தில் ஹிமாசல பிரதேசம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘டி பிரிவு’ ஆட்டத்தில் ஹிமாசல பிரதேசம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 47.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஹிமாசல பிரதேசம் 33.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வென்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக மஹிபால் லோம்ரோா் 67 ரன்கள் விளாச, ஹிமாசல பிரதேசம் தரப்பில் ரிஷி தவன் 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

ஹிமாசல பிரதேச இன்னிங்ஸிலும் அவரே ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். ராஜஸ்தான் பௌலிங்கில் ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

அதேபோல், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் சண்டீகா் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்காலையும், ஜம்மு-காஷ்மீா் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சா்வீசஸையும் வீழ்த்தின. அஸ்ஸாமிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அருணாசல பிரதேசம் தோல்வியை சந்திக்க, மணிப்பூரை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது உத்தரகண்ட்.

நாகாலாந்து 29 ரன்கள் வித்தியாசத்தில் மிஸோரத்தையும், மேகாலயம் 88 ரன்கள் வித்தியாசத்தில் சிக்கிமையும், மும்பை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரத்தையும் வென்றன. தில்லி 179 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரியை வீழ்த்தி அபார வெற்றி பெற, சௌராஷ்டிரத்திடம் 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஹரியாணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com