ஆல்ரவுண்டர் யூசுப் பதான் ஓய்வு!

ஆல்ரவுண்டர் யூசுப் பதான், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆல்ரவுண்டர் யூசுப் பதான் ஓய்வு!

ஆல்ரவுண்டர் யூசுப் பதான், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயது யூசுப் பதான், 57 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான யூசுப் பதான், 2012-ல் கடைசியாக விளையாடினார். 100 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 33 விக்கெட்டுகளும் டி20யில் 13 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் முக்கியமான வீரராக இருந்த யூசுப் பதான், 2010-ல் மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்தார். ஐபிஎல் போட்டியின் 2-வது அதிவேக சதம் அது. இந்திய வீரர்களில் முதலிடம். கடைசியாக 2019-ல் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டியில் 174 ஆட்டங்களில் 3204 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 2007-லிலும் கேகேஆர் அணிக்காக 2012 மற்றும் 2014-லிலும் ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். 

ஓய்வு குறித்த அறிவிப்பில் யூசுப் பதான் கூறியதாவது:

இந்தியாவுக்காக ஒருமுறை உலகக் கோப்பையை வென்றதும் சச்சின் டெண்டுல்கரை என் தோளில் தூக்கிச் சுமந்ததும் மறக்க முடியாத தருணங்கள். என்னுடைய சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் தோனி தலைமையிலும் ஐபிஎல் அறிமுகம் ஷேன் வார்னே தலைமையிலும் ரஞ்சி அறிமுகம் ஜகோப் மார்டின் தலைமையிலும் நிகழ்ந்தன. கெளதம் கம்பீர் தலைமையில் கேகேஆர் அணியில் விளையாடி இருமுறை நாங்கள் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளோம். எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த என்னுடைய சகோதரர் இர்பான் பதானுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com