இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு: பிசிசிஐ அறிவிப்பு

காயம் காரணமாக விலகிய உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு: பிசிசிஐ அறிவிப்பு

இந்திய டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விலகிய உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

மெல்போா்ன் டெஸ்டின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளா் உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்புகிறாா். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை மற்றும் உடற்தகுதியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவாா் எனத் தெரிகிறது.

இந்நிலையில் உமேஷ் யாதவுக்குப் பதிலாகத் தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்டுக்கு முன்பு ஷமிக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்துள்ள ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com