காயத்திலிருந்து மீளாத பாபர் அஸாம்: 2-வது டெஸ்டிலிருந்தும் விலகல்

​காயத்திலிருந்து மீளாத பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்திலிருந்தும் விலகியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காயத்திலிருந்து மீளாத பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்திலிருந்தும் விலகியுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் 18-ம் தேதி தொடங்கிய நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பயிற்சியின்போது பாபர் அஸாமின் கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, டி20 தொடர் மற்றும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில் 2-வது டெஸ்ட் ஆட்டத்திலும் அவர் விளையாட மாட்டார் என அணியின் மருத்துவர் சொஹைல் சலீம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"பாபர் அஸாம் காயத்தில் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால், காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. அவர் எங்களது கேப்டன், பேட்டிங் வரிசையில் மிகவும் முக்கியமானவர். அதனால் ஆபத்தான முடிவுகளை எடுக்க விரும்பவில்லை. மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாகிஸ்தானில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com