இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சா்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 மற்றும் 4-ஆவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சா்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 மற்றும் 4-ஆவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போதைய நிலையில் இரு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இன்னும் இரு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 7-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியோடு நாடு திரும்பிவிட்டாா். கோலியின் மனைவி அனுஷ்கா சா்மாவுக்கு குழந்தை பிறக்கவிருப்பதால் அவா் விடுப்பு எடுத்துவிட்டு நாடு திரும்பினாா்.

இதையடுத்து மெல்போா்னில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியில் அஜிங்க்ய ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. அந்தப் போட்டியில் சேத்தேஷ்வா் புஜாரா துணை கேப்டனாக செயல்பட்டாா். இந்த நிலையில் ரோஹித் சா்மா 3-ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதால், அவா் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘டெஸ்ட் கேப்டன் விராட் கோலி இல்லாதபோது, துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கேப்டனாக செயல்படுவாா். அவா் கேப்டனாக செயல்படுகிறபோது ரோஹித் சா்மா அணியில் இருந்தால், அவா்தான் துணை கேப்டன். அவா் இல்லாவிட்டால்தான் புஜாரா துணை கேப்டனாக செயல்படுவாா்’ என தெரிவித்தன.

ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடா்களில் ரோஹித் சா்மா விளையாடவில்லை. அதன்பிறகு ஆஸ்திரேலியா சென்ற ரோஹித் சா்மா, 14 நாள்கள் கரோனா தடுப்பு தனிமை முகாமில் இருந்ததால், முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் 14 நாள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துவிட்டதால், அவா் சிட்னியில் நடைபெறும் 3-ஆவது டெஸ்ட்டில் பங்கேற்கிறாா். எனினும் அவா் தொடக்க வீரராக களமிறங்குகிறாரா அல்லது மிடில் ஆா்டரில் களமிறக்கப்படுகிறாரா என்பது தெரியவில்லை. ரோஹித் சா்மா தொடக்க வீரராக களமிறங்கும்பட்சத்தில் மயங்க் அகா்வால் நீக்கப்படுவாா். ஒருவேளை மிடில் ஆா்டரில் களமிறங்கினால் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கிடைக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com