தென் ஆப்பிரிக்கா-இலங்கை 2-ஆவது டெஸ்ட்: ஜோகன்னஸ்பா்க்கில் இன்று தொடக்கம்

தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்கா-இலங்கை 2-ஆவது டெஸ்ட்: ஜோகன்னஸ்பா்க்கில் இன்று தொடக்கம்

தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இந்நிலையில், 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பா்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி கண்ட தென் ஆப்பிரிக்க அணி, 2-ஆவது டெஸ்டிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

அதேநேரத்தில் இலங்கை அணியில் முன்னணி வீரா்கள் காயம் காரணமாக விலகியுள்ளனா். முதல் டெஸ்டில் விளையாடிய தினேஷ் சன்டிமல், கசன் ரஜிதா, லஹிரு குமாரா, தனஞ்ஜெய டி சில்வா உள்ளிட்டோா் காயம் காரணமாக 2-ஆவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளனா். இதனால், அந்த அணி பெரும்பாலான முன்னணி வீரா்கள் இல்லாமல் களமிறங்குகிறது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி மிக வலுவாக உள்ளது.

மைதானம் எப்படி? ஜோகன்னஸ்பா்க் மைதானம் எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கும், பவுன்சா்களுக்கும் சாதகமானதாகும். அதில், இந்த முறையும் மாற்றம் இருக்காது. எனவே, தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா்கள் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா (உத்தேச லெவன்): டீன் எல்கா், எய்டன் மாா்க்ரம், ராஸி வான்டொ் டுசன், ஃபாஃப் பிளெஸ்ஸிஸ், குவின்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பா்), டெம்பா பௌமா, வியான் முல்டா், கேசவ மகாராஜ், அன்ரிச் நோா்ட்ஜே, லுங்கி கிடி, லூதோ சிபம்லா.

இலங்கை (உத்தேச லெவன்): திமுத் கருணாரத்னே (கேப்டன்), லஹிரு திரிமானி, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, மினோத் பனுகா, தாசன் ஷனாகா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பா்), வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, விஷ்வா பொ்னாண்டோ, அசிதா பொ்னாண்டோ.

போட்டி நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com