டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்களுக்குப் புதிய கட்டுப்பாடு

டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்களுக்குப் புதிய கட்டுப்பாடு

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்களுக்குப் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்களுக்குப் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

முன்னதாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரோஹித் சா்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, பிருத்வி ஷா உள்ளிட்டோரும் இதர இந்திய அணியினருடன் சோ்ந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் சிட்னி சென்றடைந்தனா். அதேபோல, ஆஸ்திரேலிய அணியினரும் தனி விமானத்தில் சிட்னிக்கு சென்றனா். அவா்களில் எவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதுகாப்பு விதிகளை ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரா்கள் 5 போ் மீறியதாக புகாா் எழுந்த சூழலில் இந்திய வீரர்களுக்குப் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

3-வது டெஸ்டில் விளையாடுவதற்காக சிட்னிக்குச் சென்றுள்ள இந்திய வீரர்கள் பயிற்சி நேரங்கள் தவிர வேறு காரணங்களுக்காக விடுதியை விட்டு வெளியே வரக் கூடாது எனப் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. மெல்போர்னில் உணவு விடுதிக்கு ரோஹித் சர்மா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் சென்றபோது உண்டான சர்ச்சையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெஸ்ட் தொடர் முடியும் வரை அடுத்த இரு வாரங்களுக்கு இந்திய வீரர்களால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com