10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

​இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடி வந்த இலங்கை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் திமுத் கருணாரத்னே 91 ரன்களுடனும், நிரோஷன் டிக்வெலா 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. 91 ரன்களில் ஆட்டத்தைத் தொடங்கிய கருணாரத்னே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10-வது சதத்தை எட்டினார். எனினும், அவர் 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அன்ரிச் நோர்க்கியா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டிக்வெலா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கடைசி வரிசை வீரர்கள் பெரிதளவில் ரன் சேர்க்கவில்லை. அந்த அணி 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 67 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கர் மற்றும் எய்டன் மார்கிரம் களமிறங்கினர். உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு, 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர் தட்டிச் சென்றார்.

இதன்மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 120 புள்ளிகளை முழுமையாகப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, சொந்த நாட்டில் நடைபெறும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இலங்கை. பாகிஸ்தானுடனான தொடருக்காக தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தான் விரைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com