கடுமையான விதிமுறைகளால் இந்திய வீரர்களுக்கு எரிச்சலா?: கேப்டன் ரஹானே பதில்

கரோனா தடுப்பு விதிமுறைகளால் இந்திய அணி வீரர்கள் எரிச்சலடையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
கடுமையான விதிமுறைகளால் இந்திய வீரர்களுக்கு எரிச்சலா?: கேப்டன் ரஹானே பதில்


கரோனா தடுப்பு விதிமுறைகளால் இந்திய அணி வீரர்கள் எரிச்சலடையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்குகிறது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

கரோனா பாதுகாப்பு விதிகளை ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரா்கள் 5 போ் மீறியதாக புகாா் எழுந்த சூழலில் இந்திய வீரர்களுக்குப் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

3-வது டெஸ்டில் விளையாடுவதற்காக சிட்னிக்குச் சென்றுள்ள இந்திய வீரர்கள் பயிற்சி நேரங்கள் தவிர வேறு காரணங்களுக்காக விடுதியை விட்டு வெளியே வரக் கூடாது எனப் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. மெல்போர்னில் உணவு விடுதிக்கு ரோஹித் சர்மா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் சென்றபோது உண்டான சர்ச்சையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெஸ்ட் தொடர் முடியும் வரை அடுத்த இரு வாரங்களுக்கு இந்திய வீரர்களால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி எதிர்கொள்ளும் கரோனா தடுப்பு விதிமுறைகள், தனிமைப்படுத்துதல் பற்றி இந்திய அணியின் கேப்டன் ரஹானே கூறியதாவது:

கரோனா தடுப்பு விதிமுறைகளால் நாங்கள் எரிச்சல் அடையவில்லை. இங்கு கிரிக்கெட் விளையாடவே வந்தோம். அதுதான் எங்களுக்கு முக்கியம். தனிமைப்படுத்தப்படுவதில் சில சவால்கள் உள்ளன. ஆனால் ஓர் அணியாக டெஸ்டில் தான் கவனம் செலுத்த நாங்கள் விரும்புகிறோம். சிட்னியில் பொது இடங்களில் வாழ்க்கை இயல்பாகவே உள்ளது. ஆனால் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். இது சவாலானது. இதை நாங்கள் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். 

விளையாட்டில் கவனம் செலுத்துகிறோம். எதைப் பற்றியும் புகார் அளிக்க விரும்பவில்லை. 4-வது டெஸ்ட் எங்கு நடக்க வேண்டும் என்பதை பிசிசிஐ பார்த்துக் கொள்ளும். ஓர் அணியாக எவ்வித சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com