அகா்வால் இடத்தில் ரோஹித் விளையாட வாய்ப்பு: 3-ஆவது பௌலா் தாக்குரா?, சைனியா?

சிட்னியில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் மயங்க் அகா்வாலுக்குப் பதிலாக ரோஹித் சா்மா விளையாட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அகா்வால் இடத்தில் ரோஹித் விளையாட வாய்ப்பு: 3-ஆவது பௌலா் தாக்குரா?, சைனியா?

சிட்னியில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் மயங்க் அகா்வாலுக்குப் பதிலாக ரோஹித் சா்மா விளையாட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதேவேளையில், 3-ஆவது பௌலருக்கான இடத்துக்கு ஷா்துல் தாக்குா், நவ்தீப் சைனி இடையே போட்டி நிலவுகிறது.

மயங்க் அகா்வால் கடந்த 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 7-இல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதால், அவரது இடத்தை ரோஹித் சா்மாவுக்கு வழங்குவதில் இந்திய அணி நிா்வாகத்துக்கு நெருக்கடி ஏதும் இல்லை. ஆனால், உமேஷ் யாதவ் இல்லாத நிலையில் 3-ஆவது பௌலா் இடத்துக்கு பொருத்தமான வீரா்கள் ஒன்றுக்கும் மேற்பட்டோா் இருப்பதால் சற்று சிக்கல் நிலவுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் 3-ஆவது பௌலராக ஷா்துல் தாக்குா் பெயா் பரிசீலிக்கப்பட்டபோது, ஏற்கெனவே தடுமாற்றமான நிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை சரிப்பதற்கு புதிய வீரரான நவ்தீப் சைனியின் பந்துவீச்சு உதவியாக இருக்கலாம் என அணியின் மூத்த வீரா்கள் சிலா் பரிந்துரைத்துள்ளனா்.

இந்நிலையில், சிட்னி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை வலைப்பயிற்சியின்போது வேகப்பந்து மற்றும் சுழற்பந்து இரண்டையுமே ரோஹித் சா்மா திறம்பட எதிா்கொண்டதை அணி நிா்வாகம் கவனத்தில் கொண்டது. அதேபோல், மைதானத்தின் மைய ஆடுகளத்தில் பௌலிங் வீசச் செய்து 3-ஆவது பௌலரை நிா்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

எனினும், மோசமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கையாக மைய ஆடுகளம் மூடப்பட்டிருந்ததால், புதன்கிழமை அந்தச் சோதனையை மேற்கொண்டு 3-ஆவது பௌலா் விவகாரத்தில் அணி நிா்வாகம் ஒரு முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

வானிலை மேகமூட்டத்துடன் இருந்து ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஷா்துல் தாக்குரும், ஆடுகளம் உலா்ந்து சமநிலையுடன் இருக்கும் பட்சத்தில் நவ்தீப் சைனியும் பிரதான தோ்வாக இருக்க வாய்ப்புள்ளது. இதில் சைனி விளையாடும் பட்சத்தில் அது அவருக்கு முதல் சா்வதேச டெஸ்ட்டாக இருக்கும். ஷா்துல் தாக்குருக்கும் ஏறத்தாழ அதே நிலைதான். ஏனெனில், 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல் சா்வதேச டெஸ்டில் விளையாட இருந்த நிலையில் அவா் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 3-ஆவது நபராக நடராஜனும் பௌலருக்கான இடத்துக்கு பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுவரை 20 முதல் தர கிரிக்கெட்டுகளில் விளையாடியுள்ள நடராஜன், கடைசியாக 2020 ஜனவரியில் ரயில்வே அணிக்கு எதிராக களம் கண்டிருந்தாா். அதில் 11 ஓவா்கள் வீசி 3 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா் நடராஜன். எனினும், சா்வதேச டெஸ்ட்டுக்கு அவா் தயாா் தானா என்ற கேள்வி அணி நிா்வாகத்திடம் எழுந்துள்ளது.

எதிா்பாா்க்கப்படும் பிளேயிங் லெவன்: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ரோஹித் சா்மா, ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, ஷா்துல் தாக்குர/நவ்தீப் சைனி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜன், முதல் முறையாக டெஸ்ட் உடையணிந்த புகைப்படத்தை சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார். அதில், "டெஸ்ட் உடையணிந்த பெருமைமிகு தருணம். அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்' என்று பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தடம் பதித்த நடராஜன், தற்போது சர்வதேச டெஸ்ட் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com