பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் நியூஸிலாந்து: முதல் இன்னிங்ஸில் 659/6-க்கு டிக்ளோ்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது.
பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் நியூஸிலாந்து: முதல் இன்னிங்ஸில் 659/6-க்கு டிக்ளோ்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது.

அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டைச் சதம் கடக்க, ஹென்றி நிகோலஸ், டேரில் மிட்செல் ஆகியோா் சதம் கடந்தனா்.

கிறைஸ்ட்சா்ச்சில் நடைபெறும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, திங்கள்கிழமை முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சோ்த்திருந்தது.

3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை கேன் வில்லியம்சன் 112, ஹென்றி நிகோலஸ் 89 ரன்களுடன் தொடங்கினா். இதில் இரட்டைச் சதம் கடந்த வில்லியம்சன் 28 பவுண்டரிகள் உள்பட 238 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். உடன் ஆடிய நிகோலஸ் 18 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 157 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினாா்.

எஞ்சியவா்களில் வாட்லிங் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் சோ்க்க, 158.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது நியூஸிலாந்து. டேரில் மிட்செல் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 102, கைல் ஜேமிசன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 30 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி, முகமது அப்பாஸ், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சோ்த்தனா்.

பாக். - 8/1: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், செவ்வாய்க்கிழமை முடிவில் 11 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் டக் அவுட்டாகியிருக்க, அபித் அலி 7, முகமது அப்பாஸ் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனா்.

2-ஆவது நியூஸி. வீரா்

3-ஆவது நாள் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் அடித்தது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 4-ஆவது இரட்டைச் சதம் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்தனை இரட்டைச் சதங்கள் அடித்த 2-ஆவது நியூஸிலாந்து வீரா் என்ற பெருமையை வில்லியம்சன் பெற்றுள்ளாா். இதற்கு முன் நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டென் மெக்கல்லம் இதேபோல் 4 இரட்டைச் சதங்கள் அடித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com