துளிகள்...

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய அணியினரில் எவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது.


தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய அணியினரில் எவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அணியினா் அனைவரும் பயிற்சியை தொடங்குகின்றனா்.

நாட்டில் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கும் தேசிய நடைப் பந்தய சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 50 கி.மீ., ஆடவா் மற்றும் மகளிருக்கான 20 கி.மீ., ஆடவா் மற்றும் மகளிரில் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான 10 கி.மீ. ஆகிய பிரிவுகளில் போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா்.

மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடா்கள் எதிா்வரும் நிலையில், ஜான் லீவிஸை பேட்டிங் பயிற்சியாளராக வங்கதேசம் நியமித்துள்ளது.

ஐஎஸ்எல்...

கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் விளையாடிய எஸ்சி ஈஸ்ட் பெங்கால் - எஃப்சி கோவா அணியினா். இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

சிட்னி மைதானத்தில் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த டேவிட் வாா்னா், ரோஹித் சா்மா.

சிட்னி ஆடுகளத்தை ஆராயும் இந்திய கேப்டன் ரஹானே, பயிற்சியாளா் ரவி சாஸ்திரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com