பிரிஸ்பேன் டெஸ்டில் இருந்து பும்ரா விலகல்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்டில் பும்ரா பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது.
பிரிஸ்பேன் டெஸ்டில் இருந்து பும்ரா விலகல்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்டில் பும்ரா பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இதனால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. ரோஹித் சர்மா 52, புஜாரா 77, ரிஷப் பந்த் 97, அஸ்வின் 39, விஹாரி 23 ரன்கள் எடுத்தார்கள். கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது. 

ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகியுள்ளார்கள். 4-வது டெஸ்டில் ஜடேஜாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் கடைசி டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. 3-வது நாளன்று ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்ஸில் பும்ராவுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. எனினும் 25 ஓவர்களை வீசினார். காயம் காரணமாக பும்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இந்த டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா அதிக ஓவர்களை வீசியுள்ளார். 3 டெஸ்டுகளில் 117.4 ஓவர்கள். 

50 சதவீதம் உடற்தகுதி இருந்தாலும் கடைசி டெஸ்டில் பும்ரா பங்கேற்பார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 5 நாள்கள் விளையாடும் அளவுக்கான உடற்தகுதியை பும்ரா கொண்டிருப்பாரா என்பது சந்தேகத்துக்குரியதாக உள்ளது. இதனால் கடைசி டெஸ்டில் பும்ரா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பும்ராவால் விளையாட முடியாமல் போனால் ஷர்துல் தாக்குர், நடராஜன் ஆகிய இருவரில் ஒருவர் பிரிஸ்பேன் டெஸ்டுக்குத் தேர்வு செய்யப்படுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com