துளிகள்

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 131 ஓவர்கள் பேட் செய்தது


2 சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 131 ஓவர்கள் பேட் செய்தது. கடந்த 41 ஆண்டுகளில் 4-ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி அதிக ஓவர்கள் பேட் செய்த போட்டி இதுதான். இதற்கு முன்னர் 1979-இல் டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்  இந்திய அணி 131 ஓவர்கள் பேட் செய்துள்ளது. 1979-இல் இங்கிலாந்துக்கு எதிராக  150.5 ஓவர்கள் பேட் செய்ததே 4-ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி அதிக ஓவர்கள் பேட் செய்த போட்டியாகும். 

6சிட்னி டெஸ்டில் டிரா செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 130 ஓவர்களுக்கு மேல் பேட் செய்து அந்தப் போட்டியை டிரா செய்த 6-ஆவது அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்தியா.

256 ஹனுமா விஹாரி-அஸ்வின் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு பேட் செய்தபோது 256 பந்துகளை எதிர்கொண்டது. இதன்மூலம் 4-ஆவது இன்னிங்ஸில் 6-ஆவது விக்கெட்டுக்கு அதிக பந்துகளை எதிர்கொண்ட ஜோடிகள் வரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 1999-இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்-ஜஸ்டின் லாங்கர் ஜோடி 353 பந்துகளை எதிர்கொண்டதே இன்றளவும் சாதனையாக உள்ளது.

3 நான்காவது இன்னிங்ஸில் 6-ஆவது விக்கெட்டுக்கு அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய ஜோடிகள் வரிசையில் ஹனுமா விஹாரி-அஸ்வின் ஜோடி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2018-இல் இங்கிலாந்துக்கு எதிராக கே.எல்.ராகுல்-ரிஷப் பந்த் ஜோடி  267 பந்துகளையும், 1999-இல் சச்சின் டெண்டுல்கர்-நவ்ஜோத் சிங் சித்து ஜோடி 266 பந்துகளையும் எதிர்கொண்டு முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.

148 புஜாரா-ரிஷப் பந்த் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 148 ரன்கள் குவித்தது. ஒரு டெஸ்டில் 4-ஆவது இன்னிங்ஸில் 4-ஆவது விக்கெட்டுக்கு இந்திய ஜோடி குவித்த அதிகபட்ச ரன் இதுதான். 72 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் ஹஸôரே-ருசி மோடி ஜோடி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 4-ஆவது இன்னிங்ஸில் 139 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. அதை புஜாரா-பந்த் ஜோடி தகர்த்துள்ளது.

97 ரிஷப் பந்த்  97 ரன்கள் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 4-ஆவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 1975-இல் அடிலெய்டில் இங்கிலாந்தின் ஆலன் நாட் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.

3 கடைசி நாளான திங்கள்கிழமை இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. 2001-க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் கடைசி நாளில் 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுவது இது 2-ஆவது முறையாகும்.

128 அஸ்வின் 128 பந்துகளை எதிர்கொண்டார். இதன்மூலம் 4-ஆவது இன்னிங்ஸில் 7-ஆவது வீரராக களமிறங்கி அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களின் வரிசையில் 5-ஆவது இடத்தைப் பிடித்தார் அஸ்வின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com