வெற்றிக்கு நிகரானது

வெற்றிக்கு நிகரானது

சிட்னி டெஸ்டில் செய்த டிராவானது வெற்றிக்கு நிகரானது என்றார் இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே.


சிட்னி: சிட்னி டெஸ்டில் செய்த டிராவானது வெற்றிக்கு நிகரானது என்றார் இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே.

சிட்னி டெஸ்ட் போட்டியில் டிரா செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஹானே மேலும் கூறியதாவது: சிட்னி டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரியின் சிறப்பான இன்னிங்ûஸ அனைவரும் பார்த்தோம். இந்த டெஸ்டில் அவர் ஆடியவிதம், 2019-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் அடித்த சதத்தைவிட சிறந்த ஒன்றாகும். குறிப்பாக காயமடைந்த பிறகும் அவர் போராடி அணியை தோல்வியிலிருந்து மீட்டுள்ளார். 

கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் அவர் சிறப்பாக ஆடியிருக்கிறார். இந்த டிராவானது வெற்றிக்கு நிகரானதாகும். இதற்கான அனைத்து பாராட்டுகளும் விஹாரி, அஸ்வின், ரிஷப் பந்த், புஜாரா ஆகியோரையே சேரும். ரிஷப் பந்த் மிக அற்புதமாக ஆடினார். எனினும் துரதிருஷ்டவசமாக சதமடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார். அவருடைய ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இதேபோல் புஜாரா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோரை பிசிசிஐ தலைவர் செüரவ் கங்குலியும் பாராட்டியுள்ளார்.

புஜாரா 6,000

சிட்னி டெஸ்டில் நாதன் லயன் வீசிய 76-ஆவது ஓவரில் பவுண்டரியை விளாசிய இந்திய வீரர் சேத்தேஷ்வர் புஜாரா, அரை சதத்தை எட்டியதோடு, டெஸ்ட் போட்டியில் 6,000 ரன்கள் குவித்த 11-ஆவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

அவர், தனது 134-ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 6,000 ரன்களை எட்டிய இந்திய வீரர்கள் வரிசையில் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் புஜாரா. சுநீல் கவாஸ்கர் (117 இன்னிங்ஸ்), விராட் கோலி (119), சச்சின் டெண்டுல்கர் (120), வீரேந்திர சேவாக் (123), ராகுல் திராவிட் (125) ஆகியோர் டெஸ்டில் அதிவேகமாக 6,000 ரன்களை எட்டிய இந்திய வீரர்கள் வரிசையில் முறையே முதல் 5 இடங்களில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com