சரித்திரம் படைக்குமா இந்தியா?: பிரிஸ்பேனில் கடந்த 31 டெஸ்டுகளாகத் தோற்காத ஆஸி. அணி!

பிரிஸ்பேனில் 32 வருடங்களாகத் தோற்காத ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி சரித்திரம் படைக்குமா என...
சரித்திரம் படைக்குமா இந்தியா?: பிரிஸ்பேனில் கடந்த 31 டெஸ்டுகளாகத் தோற்காத ஆஸி. அணி!

பிரிஸ்பேனில் 32 வருடங்களாகத் தோற்காத ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி சரித்திரம் படைக்குமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்க்ள். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது.  இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 407 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, கடைசி நாளில் ஆஸி. பந்துவீச்சை சமாளித்து டெஸ்டை டிரா செய்து அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. பிரிஸ்பேனில் நடைபெறும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெள்ளியன்று தொடங்குகிறது.

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக 1988-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தோற்றது. அதன்பிறகு பிரிஸ்பேனில் விளையாடிய 31 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை. இதுவரை அங்கு விளையாடிய 55 டெஸ்டுகளில் 8-ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

பிரிஸ்பேனில் இந்திய அணி 6 டெஸ்டுகளில் விளையாடி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. 5 டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது.

இதனால் இந்திய அணி பிரிஸ்பேனில் வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ரஹானே படை சரித்திரம் படைக்குமா? டெஸ்ட் தொடரை வென்று கிரிக்கெட் உலகை ஆச்சயப்படுத்துமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள். 

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணி

விளையாடியது: 55 டெஸ்டுகள்
வெற்றிகள்: 33
தோல்விகள்: 8
தொடர்ச்சியாக தோற்காத டெஸ்டுகளின் எண்ணிக்கை: 31 டெஸ்டுகள் (24 வெற்றிகள், 7 டிராக்கள்)
கடைசியாக டிரா ஆனது: 2012-ல் தென் ஆப்பிரிக்காவுடன்
கடைசியாக ஆஸ்திரேலியா தோற்றது: மேற்கிந்தியத் தீவுகளுடன், 1988-ல்
பிரிஸ்பேனில் இந்திய அணி: 6 டெஸ்டுகள், 5 தோல்விகள், 1 டிரா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com