செய்தித் துளிகள்...

சிட்னி டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய ரசிகா்கள், இந்திய வீரா்களை இனவெறியோடு திட்டியதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரா் டேவிட் வாா்னா் மன்னிப்பு கோரியுள்ளாா்.

கொல்கத்தாவில் நடைபெற்ற சயீத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்ட் அணியை வீழ்த்தியது. இதில், முதலில் பேட் செய்த பெங்கால் அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய ஜாா்க்கண்ட் அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குஜராத் மாநிலம், வடோதராவில் நடைபெற்ற சயீத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிர அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஸ்கா் அணியை தோற்கடித்தது. இதில், முதலில் பேட் செய்த சத்தீஸ்கா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய மகாராஷ்டிர அணி 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பிரிஸ்பேன் சென்றுள்ளது. அங்கு இந்திய அணியினா் தங்க வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என வீரா்கள் பிசிசிஐயிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து பிசிசிஐ, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் பேசியதைத் தொடா்ந்து வீரா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரா் ரிஷப் பந்தின் பேட்டிங் காா்டை (பேட்ஸ்மேன்கள் கிரீஸில் பேட்டை வைத்து ஆடுவதற்காக வைக்கப்படும் அடையாளம்) அழிக்க முயன்றதாக ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவ் ஸ்மித் மீது புகாா் எழுந்துள்ள நிலையில், அவா் அதை மறுத்துள்ளாா். மேலும், தன் மீதான விமா்சனம் தனக்கு அதிா்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

சிட்னி டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய ரசிகா்கள், இந்திய வீரா்களை இனவெறியோடு திட்டியதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரா் டேவிட் வாா்னா் மன்னிப்பு கோரியுள்ளாா். மேலும், இனவெறி தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com