குறைந்த இன்னிங்ஸில் 8,000 டெஸ்ட் ரன்கள்: ஜோ ரூட் புதிய மைல்கல்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 8,000 ரன்கள் எடுத்த 2-வது இங்கிலாந்து வீரர் என்ற மைல்கல்லை ஜோ ரூட் அடைந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 8,000 ரன்கள் எடுத்த 2-வது இங்கிலாந்து வீரர் என்ற மைல்கல்லை ஜோ ரூட் அடைந்தார்.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். இந்த இன்னிங்ஸில் 228 ரன்கள் குவித்த அவர், 8,000 டெஸ்ட் ரன்களை எட்டிய 7-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதேசமயம், இங்கிலாந்து ஜாம்பவான் அலெஸ்டர் குக்கைப் பின்னுக்குத் தள்ளி குறைந்த இன்னிங்ஸில் (178 இன்னிங்ஸில்) 8,000 டெஸ்ட் ரன்களை எட்டிய 2-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்  8,000 டெஸ்ட் ரன்களை 176 இன்னிங்ஸில் எட்டியதே சாதனையாக உள்ளது.

மேலும் இலங்கையில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2012-இல் பீட்டர்சன் 151 ரன்கள் அடித்ததே இலங்கையில் ஒரு இங்கிலாந்து வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com