பிரிஸ்பேன் டெஸ்ட்: விக்கெட்டைத் தூக்கியெறிந்த ரோஹித் சர்மா மீது கவாஸ்கர் சாடல்

அந்த ஷாட்டை எதற்காக விளையாட வேண்டும்? நீங்கள் மூத்த வீரர்...
பிரிஸ்பேன் டெஸ்ட்: விக்கெட்டைத் தூக்கியெறிந்த ரோஹித் சர்மா மீது கவாஸ்கர் சாடல்

பிரிஸ்பேன் டெஸ்டில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்த ரோஹித் சர்மாவின் செயலுக்கு முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. டிம் பெயின் 38, கேம்ரூன் கிரீன் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுசேன் 108, பெயின் 50, கிரீன் 47, வேட் 45 ரன்களும் எடுத்தார்கள். நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள். 

இதன்பிறகு விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 7, ரோஹித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். புஜாரா 8, ரஹானே 2 ரன்களில் களத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில் இந்திய இன்னிங்ஸில் நன்கு விளையாடி வந்த ரோஹித் சர்மா, லயன் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று 44 பந்துகளில் ஆட்டமிழந்தார். டெஸ்டின் முக்கியமான கட்டத்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்த ரோஹித் சர்மாவை முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். சேனல் செவன் தொலைக்காட்சியில் கவாஸ்கர் கூறியதாவது:

ஏன்? ஏன்? ஏன்? நம்ப முடியாத ஷாட் அது. பொறுப்பில்லாத ஷாட். லாங் ஆன், டீப் ஸ்கொயர் லெக்கில் ஃபீல்டர்கள் இருக்கிறார்கள்.

சில பந்துகளுக்கு முன்புதான் பவுண்டரி அடித்தீர்கள். அந்த ஷாட்டை எதற்காக விளையாட வேண்டும்? நீங்கள் மூத்த வீரர். இதற்கு எவ்விதச் சாக்குப்போக்கும் சொல்லக் கூடாது. 

இது ஒரு தேவையில்லாத விக்கெட், தேவையில்லாத விக்கெட், ஆஸி. அணிக்குத் தூக்கிக் கொடுத்துவிட்டார். சுத்தமாகத் தேவையில்லாத ஷாட். இது டெஸ்ட் ஆட்டம். நீங்கள் உங்கள் இன்னிங்ஸை ஆரம்பித்து, அதைப் பெரிய சதமாக மாற்ற வேண்டும், அதுவும் எதிரணி 369 ரன்கள் எடுத்திருக்கும்போது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com