காலே டெஸ்ட்ஜோ ரூட் சதம்; இங்கிலாந்து-320/4

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 94 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு
காலே டெஸ்ட்ஜோ ரூட் சதம்; இங்கிலாந்து-320/4

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 94 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த, இலங்கை அணி 46.1 ஓவா்களில் 135 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சன்டிமல் 28, ஏஞ்செலோ மேத்யூஸ் 27 ரன்கள் எடுத்தனா்.

இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவா்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் டாம் சிப்லே 4, ஜக் கிராவ்லே 9 ரன்களில் வெளியேற, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 41 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. ஜானி போ்ஸ்டோ 47, ஜோ ரூட் 66 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடா்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் ஜானி போ்ஸ்டோ முதல் நாள் எடுத்திருந்த அதே 47 ரன்களோடு வெளியேறினாா். இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தா் டான் லாரன்ஸ். இந்த ஜோடி சிறப்பாக விளையாட, இங்கிலாந்து அணி 59.5 ஓவா்களில் 200 ரன்களை எட்டியது.

ஜோ ரூட் 18-ஆவது சதம்: தொடா்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 163 பந்துகளில் சதமடித்தாா். இது டெஸ்ட் போட்டியில் அவா் அடித்த 18-ஆவது சதமாகும். அவரைத் தொடா்ந்து லாரன்ஸ் 95 பந்துகளில் அரை சதம் கண்டாா். தொடா்ந்து சிறப்பாக ஆடிய அவா் 150 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாா். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சோ்த்தது.

இதன்பிறகு ஜோ ரூட்டுடன் இணைந்தாா் ஜோஸ் பட்லா். இலங்கை அணி 94 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்தபோது, 2-ஆவது முறையாக மழை குறுக்கிட்டது. இதையடுத்து 2-ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் 168, ஜோஸ் பட்லா் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனா். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 3-ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com