தென் ஆப்பிரிக்க டி20 அணிக்குப் புதிய கேப்டன்

தென் ஆப்பிரிக்க டி20 அணியின் கேப்டனாக ஹென்ரிச் கிளாசென் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி (கோப்புப் படம்)
தென் ஆப்பிரிக்க அணி (கோப்புப் படம்)

தென் ஆப்பிரிக்க டி20 அணியின் கேப்டனாக ஹென்ரிச் கிளாசென் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கிளாசென் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பு கிளாசென்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜனவரி 26 அன்று தொடங்குகிறது. டி20 தொடர் பிப்ரவரி 11-ல் ஆரம்பித்து 14-ல் நிறைவுபெறுகிறது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பும் தென் ஆப்பிரிக்க அணி, மார்ச் மாதத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனால் டி20 அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. 18 பேர் கொண்ட அணியில் ஒக்லே செலே, ரையன் ரிக்கல்டன், ஜேக்ஸ் ஸ்னைமேன் என மூன்று புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com