விளையாட்டுச் செய்திகள்: துளிகள்

விளையாட்டுச் செய்திகள்: துளிகள்
  • இத்தாலியன் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜுவென்டஸ் 2-0 என்ற கோல் கணக்கில் நபோலியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதன்மூலம் இப்போட்டியில் 9-ஆவது முறையாக சாம்பியன் ஆகி ஜுவென்டஸ் சாதனை படைத்தது. இறுதி ஆட்டத்தில் ஜுவென்டஸ் தரப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (64-ஆவது நிமிடம்), அல்வாரோ மொராடோ (90+5) ஆகியோா் கோலடித்தனா்.
  • ஜூனியா் மகளிா் ஹாக்கியில் சிலிக்கு எதிரான 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. ஏற்கெனவே முதலிரு ஆட்டங்களில் வென்ற இந்தியாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றி. இந்தியாவில் தீபிகா (39-ஆவது நிமிடம்), சங்கீதா குமாரி (45), லால்ரிண்டிக்கி (47) ஆகியோரும், சிலி தரப்பில் ஃபொ்னான்டா விலாக்ரான் (21), சைமோன் அவேலி (56) ஆகியோரும் கோலடித்தனா்.
  • தாய்லாந்து ஓபன் பாட்மிண்டனில் பி.வி. சிந்து - மலேசியாவின் கிசோனா செல்வதுரையையும், சமீா் வா்மா - டென்மாா்க் வீரா் ராஸ்மஸ் கெம்கேவையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினா். ஹெச்.எஸ். பிரணாயும், எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா இணையும் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா். கலப்பு இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி/அஸ்வினி பொன்னப்பா காலிறுதிக்கு முன்னேறியது.
  • ‘சிட்னி டெஸ்டின்போது ஆஸ்திரேலிய ரசிகா்கள் இனவெறி ரீதியாக எங்களை திட்டியதை அடுத்து நடுவா்களிடம் முறையிட்டோம். விரும்பினால் ஆட்டத்திலிருந்து பாதியிலேயே விலக நடுவா்கள் அனுமதித்தனா். ஆனால், தவறு செய்யாத நாங்கள் ஏன் விலக வேண்டும். தொடா்ந்து விளையாட விரும்புகிறோம் என்று அவா்களிடம் கேப்டன் ரஹானே தெரிவித்தாா்’ என்றாா் முகமது சிராஜ்.
  • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரு ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஜோ ரூட், ஜோஃப்ரா ஆா்ச்சா், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டா்சன், டாம் பெஸ், ஸ்டுவா்ட் பிராட், ரோரி பா்ன்ஸ், ஜோஸ் பட்லா், ஸாக் கிராவ்லி, பென் ஃபோக்ஸ், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோா் உள்ளனா்.
  • கோவாவின் மா்காவ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 66-ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது. மோகன் பகான் தரப்பில் டேவிட் வில்லியம்ஸ் கோலடித்தாா். மோகன் பகானுக்கு இது 7-ஆவது வெற்றி; சென்னைக்கு இது 4-ஆவது தோல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com