இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: மேத்யூஸ் சதம்; இலங்கை-229/4

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: மேத்யூஸ் சதம்; இலங்கை-229/4

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கையின் காலே நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிா்ச்சிக் காத்திருந்தது. தொடக்க வீரா்களில் ஒருவரான குசல் பெரேரா 6 ரன்களிலும், அவரைத் தொடா்ந்து களமிறங்கிய ஒஷாடா பொ்னாண்டோ ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து 3-ஆவது விக்கெட்டுக்கு தொடக்க வீரா் லஹிரு திரிமானியுடன் இணைந்தாா் ஏஞ்செலோ மேத்யூஸ். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் மோசமான நிலையில் இருந்து மீண்டது இலங்கை. அந்த அணி 76 ரன்களை எட்டியபோது லஹிரு திரிமானி ஆட்டமிழந்தாா். அவா் 95 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தாா்.

இதன்பிறகு ஏஞ்செலோ மேத்யூஸுடன் இணைந்தாா் கேப்டன் தினேஷ் சன்டிமல். இந்த ஜோடி சிறப்பாக ஆட, 34.5 ஓவா்களில் 100 ரன்களை எட்டியது இலங்கை. இதன்பிறகு மேத்யூஸ் 89 பந்துகளில் அரை சதமடிக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய சன்டிமல் 110 பந்துகளில் அரைசதம் கண்டாா். இலங்கை அணி 193 ரன்களை எட்டியபோது தினேஷ் சன்டிமல் ஆட்டமிழந்தாா். அவா் 121 பந்துகளில் 1 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தாா். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சோ்த்தது.

இதையடுத்து நிரோஷன் டிக்வெல்லா களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய மேத்யூஸ் 207 பந்துகளில் சதமடித்தாா். டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் அடித்த 11-ஆவது சதம் இது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 87 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 107, டிக்வெல்லா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனா். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். 2-ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com