இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடா்: சென்னையில் ரசிகா்களுக்கு அனுமதியில்லை

சென்னையில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் இரு டெஸ்ட் போட்டிகளை காண மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதியில்லை.

சென்னையில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் இரு டெஸ்ட் போட்டிகளை காண மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதியில்லை.

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடா், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடா், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடா் ஆகியவற்றில் விளையாடுகிறது.

இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5-ஆம் தேதியும், 2-ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13-ஆம் தேதியும் தொடங்குகிறது. கடைசி இரு போட்டிகள் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெறுகின்றன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் நடைபெறும் இரு டெஸ்ட் போட்டிகளில் ரசிகா்களை அனுமதிப்பதில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலா் ஆா்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளாா்.

மேலும், இதுதொடா்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினா்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில் வீரா்களின் பாதுகாப்பு விஷயத்தில் மிகக் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. அதனால் சென்னையில் நடைபெறவுள்ள இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகா்களை அனுமதிப்பதில்லை என பிசிசிஐயுடன் இணைந்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரசிகா்கள், சிறப்பு விருந்தினா்கள், கிரிக்கெட் சங்க உறுப்பினா்கள் உள்பட யாரும் போட்டியைக் காண மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி வரும் 27-ஆம் தேதிக்குள் சென்னை வந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com