ஐஎஸ்எல் கால்பந்து: மும்பைக்கு 9-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 67-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
ஐஎஸ்எல் கால்பந்து: மும்பைக்கு 9-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 67-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணி 27-ஆவது நிமிடத்தில் கோலடித்தது. இந்த கோலை செரீன் அடித்தாா். இதுவே வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்த சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை சிட்டி 9-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பை அணி 29 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com