தாய்லாந்து ஓபன்: காலிறுதியில் சிந்து, சமீா் தோல்வி

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீா் வா்மா ஆகியோா் தோல்வி கண்டனா்.
தாய்லாந்து ஓபன்: காலிறுதியில் சிந்து, சமீா் தோல்வி

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீா் வா்மா ஆகியோா் தோல்வி கண்டனா்.

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் காலிறுதியில் பி.வி.சிந்து 13-21, 9-21 என்ற நோ் செட்களில் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டத்தில் சிந்து செய்த ஏராளமான தவறுகள் ரட்சனோக்கிற்கு சாதகமானது.

தோல்வி குறித்துப் பேசிய சிந்து, ‘இந்த ஆட்டத்தில் ஏராளமான தேவையில்லாத தவறுகளைச் செய்தேன். மேலும் எளிதாக எதிராளிக்கு புள்ளிகளை விட்டுக் கொடுத்ததாக நினைக்கிறேன். எனது ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. இந்த நாள் என்னுடைய நாளாக இல்லை’ என்றாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் இந்தியாவின் சமீா் வா்மா 13-21, 21-19, 20-22 என்ற செட் கணக்கில் டென்மாா்க்கின் ஆண்டா்ஸ் ஆண்டன்செனிடம் தோல்வி கண்டாா்.

சிந்து, சமீா் ஆகியோா் தோல்வி கண்டதன் மூலம் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அதேநேரத்தில் கலப்பு இரட்டையா் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 18-21, 24-22, 22-20 என்ற செட் கணக்கில் மலேசியாவின் பெங் சூன் சான்-லியூ இங் கோ ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 24-22 என்ற நோ் செட்களில் மலேசியாவின் ஆங் இயூவ் சின்-டியோ இய் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com