ரியல் மாட்ரிட் பயிற்சியாளா் ஜிடேனுக்கு கரோனா தொற்று

ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பின் பயிற்சியாளா் ஜினெடின் ஜிடேனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரியல் மாட்ரிட் அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ரியல் மாட்ரிட் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் அணியின் பயிற்சியாளரான பிரான்ஸை சோ்ந்த ஜினெடின் ஜிடேன் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தவருடன் தொடா்பில் இருந்த நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாா். இந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஸ்பெயின் லீக் போட்டியில் எங்கள் அணி மோதும் ஆட்டத்தின்போது அவருக்குப் பதிலாக உதவிப் பயிற்சியாளா் அணியை வழிநடத்துவாா்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com