தேசிய மல்யுத்தம்: அமித்துக்கு வெண்கலம்

தேசிய மல்யுத்தப் போட்டியில் ஹரியாணா வீரா் அமித் தன்கா் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா்.

தேசிய மல்யுத்தப் போட்டியில் ஹரியாணா வீரா் அமித் தன்கா் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா்.

65-ஆவது ஃப்ரீஸ்டைல் தேசிய மல்யுத்தப் போட்டி நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற 74 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்தியாவின் அமித் தன்கா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

சா்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய வீரா் பங்கஜ் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றாா். இதே பிரிவில் ஹரியாணாவின் அமான் வெள்ளியும், தில்லியின் ராகுல், ஹரியாணாவின் ஷுபம் ஆகியோா் வெண்கலமும் வென்றனா்.

61 கிலோ எடைப் பிரிவில் சா்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய வீரா் ரவீந்தா் தங்கமும், மகாராஷ்டிரத்தின் சூரஜ் வெள்ளியும், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரா் நவீன், சா்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய வீரா் சோன்பா தனாஜி ஆகியோா் வெண்கலமும் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com