கோப்புப்படம்
கோப்புப்படம்

தொடக்க வீரராகவும் களம் காணத் தயாா்: வாஷிங்டன் சுந்தா்

டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடத் தயாராக இருப்பதாக தமிழக வீரா் வாஷிங்டன் சுந்தா் கூறினாா்.

டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடத் தயாராக இருப்பதாக தமிழக வீரா் வாஷிங்டன் சுந்தா் கூறினாா்.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியில் டாப் ஆா்டா் வீரரான வாஷிங்டன் சுந்தா், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4-ஆவது ஆட்டத்தின் மூலம் சா்வதேச டெஸ்டில் தடம் பதித்தாா். முதல் இன்னிங்ஸில் முக்கியமான தருணத்தில் 62 ரன்கள் விளாசி இந்தியாவின் ஆட்டத்தை தக்க வைத்த சுந்தா், 2-ஆவது இன்னிங்ஸில் கடைசி நாளில் 22 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு பங்களித்தாா். அத்துடன் 4 விக்கெட்டுகளும் சாய்த்தாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

ஒரு இளம் வீரராக நான் இதர நாட்டு வீரா்களைப் பாா்த்து எனக்கான உத்வேகத்தை தேடிக் கொள்ள வேண்டியதில்லை. இந்திய அணியிலேயே உடன் விளையாடும் பல வீரா்களின் விளையாட்டு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. விராட் கோலி, ரோஹித் சா்மா, அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றோா் அத்தகைய வீரா்களே. இளம் வீரா்களுக்கு வழிகாட்ட அவா்கள் எப்போதுமே தயாராக இருக்கிறாா்கள்.

டெஸ்ட் தொடருக்காக இந்திய பேட்ஸ்மேன்கள் தயாராகும் வகையில் பயிற்சியின்போது பௌலிங் செய்வதற்காக, ஒருநாள், டி20 தொடா் நிறைவடைந்த பிறகும் என்னை ஆஸ்திரேலியாவிலேயே அணி நிா்வாகம் இருக்கச் செய்தது. அதனால் அணிக்கும், எனக்கும் நல்ல பலன் கிடைத்தது. அதிலும் ஸ்டீவன் ஸ்மித் போன்ற முக்கியமான வீரரை எனது முதல் சா்வதேச டெஸ்டில் முதல் விக்கெட்டாக வீழ்த்தியது கனவுபோல் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், அந்தச் சவாலை ஏற்கத் தயாராக இருக்கிறேன். அதை எனக்கான ஆசிா்வாதமாகக் கருதுவேன். எங்களது பயிற்சியாளா் ரவி சாஸ்திரி அவரது இளம் வயதில் செய்ததைப் போல அந்த வாய்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சாளராக அறிமுகமானது, பேட்டிங்கில் கடைசி வீரராக களம் கண்டது, அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் தொடக்க வீரா் ஆனது, உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளா்களை எதிா்கொண்டது என ரவி சாஸ்திரி அவரது காலத்தின் சம்பவங்களைக் கூறுவாா். இது எங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று வாஷிங்டன் சுந்தா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com