மகத்தான நம் தேசத்துக்கு ஆயிரம் சல்யூட்கள்: நடராஜனின் குடியரசுத் தினப் பதிவு

நாடு முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது... 
படம் - twitter.com/Natarajan_91
படம் - twitter.com/Natarajan_91

நாடு முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன், குடியரசு தினத்துக்காக ட்விட்டரில் எழுதியதாவது:

நம்முடைய மகத்தான தேசத்துக்கு ஆயிரம் சல்யூட்கள். மேலும் சிறப்பான, வளம் மிகுந்த நாடாக மாறட்டும். குடியரசு தின வாழ்த்துகள் என்றார். 

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் கடந்த வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சென்ற நடராஜன், தேசியக் கொடிக்கு முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com