டிஎன்பிஎல்: கேப்டன் ஆனார் ஷாருக் கான்

அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் பெற்ற ஷாருக் கானை, ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. 
டிஎன்பிஎல்: கேப்டன் ஆனார் ஷாருக் கான்

ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகியுள்ள தமிழக வீரர் ஷாருக் கான், டிஎன்பிஎல் போட்டியில் கோவை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது வீரர் ஷாருக் கான், 5 முதல் தர ஆட்டங்களிலும் 25 லிஸ்ட் ஏ, 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தமிழக அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் பெற்ற ஷாருக் கானை, ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. 

இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடி 107 ரன்கள் எடுத்தார் ஷாருக் கான். 

இந்நிலையில் இந்த வருடம் நடைபெறவுள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 2018-ல் ஷாருக் கானை லைகா கோவை அணி தேர்வு செய்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com