பொலார்ட் அதிரடி ஆட்டம்: தெ.ஆ. அணியை வீழ்த்தி டி20 தொடரை சமன் செய்த மே.இ. தீவுகள்

பொலார்ட் அதிரடி ஆட்டம்: தெ.ஆ. அணியை வீழ்த்தி டி20 தொடரை சமன் செய்த மே.இ. தீவுகள்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.

செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற 4-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. சிம்மன்ஸ் 47 ரன்களும் பொலார்ட் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் எடுத்தார்கள். பொலார்ட் 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். 

தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. டி காக் 60 ரன்கள் எடுத்தார். பிராவோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியினால் டி20 தொடரை 2-2 என சமன் செய்துள்ளது மே.இ. தீவுகள் அணி. 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com