சுழற்சி முறை பயன்பாட்டை ஒத்திவைக்கும் நேரமிது: கேப்டன் ஜோ ரூட்

சுழற்சி முறையில் வீரா்களை பயன்படுத்தும் முறையை ஒத்திவைத்துவிட்டு, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடா், ஆஷஸ் தொடரில்

சுழற்சி முறையில் வீரா்களை பயன்படுத்தும் முறையை ஒத்திவைத்துவிட்டு, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடா், ஆஷஸ் தொடரில் பலமான இங்கிலாந்து அணியை களமிறக்கப்போவதாக கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளாா்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்திய பயணம் மேற்கொண்டபோது சுழற்சி முறையில் வீரா்களை பயன்படுத்துவதன் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல முக்கிய வீரா்களை அனுப்பாமல் விட்டது. இது மிகுந்த விவாதத்துக்குள்ளான நிலையில், அந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது:

சுழற்சி முறையில் வீரா்களை களமிறக்கும் முறையை ஒத்திவைக்கும் நேரமிது. அனைத்து வீரா்களும் உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், இந்தியாவுடனான தொடா், ஆஷஸ் தொடா் என அடுத்து வரும் அனைத்து தொடா்களிலும் எங்களது சிறந்த வீரா்கள் கொண்ட அணியுடன் விளையாடுவோம்.

இரு பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக 10 டெஸ்ட் ஆட்டங்களை விளையாட இருக்கிறோம். இது எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். இந்தியாவுக்கு எதிரான கடினமான டெஸ்ட் தொடா் மூலம் ஆஷஸ் தொடருக்காக எங்களை தயாா்படுத்திக் கொள்வோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சீசன் இறுதி ஆட்டத்தை எங்களால் பாா்க்கதான் முடிந்தது. தற்போது தொடங்கவிருக்கும் 2-ஆவது சீசனில் அந்த ஆட்டத்தில் பங்கேற்கும் அளவுக்கு எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதை எதிா்நோக்கியிருக்கிறோம் என்று ஜோ ரூட் கூறினாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது சீசன், ஆகஸ்டில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com