150 ரன்கள் அடித்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற பிரபல வங்கதேச வீரர் முடிவு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற பிரபல வங்கதேச வீரர் மஹ்முதுல்லா முடிவெடுத்துள்ளார்.
150 ரன்கள் அடித்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற பிரபல வங்கதேச வீரர் முடிவு


டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற பிரபல வங்கதேச வீரர் மஹ்முதுல்லா முடிவெடுத்துள்ளார்.

35 வயது ஆல்ரவுண்டர் முகமது மஹ்முதுல்லா வங்கதேச அணிக்காக 50 டெஸ்ட், 197 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2007-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் தற்போது விளையாடி வரும் மஹ்முதுல்லா (இது அவருடைய 50-வது டெஸ்ட்), மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் தனது அணி வீரர்களிடம், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் இதுவரை இதைப் பற்றி அவர் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

இந்த டெஸ்டில் அற்புதமாக பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் மஹ்முதுல்லா. இது அவருடைய 5-வது டெஸ்ட் சதம். 2017 வரை வங்கதேசத்தின் அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் மஹ்முதுல்லா இடம்பெற்றார். எனினும் கடந்த நான்கு வருடங்களில் இருமுறை அணியிலிருந்து நீக்கப்பட்டார். டி20 ஆட்டங்களில் வங்கதேச அணியின் கேப்டனாக 2019 முதல் செயல்பட்டு வருகிறார். 

மஹ்முதுல்லாவின் இந்த முடிவை வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹஸ்ஸன் ஏற்க மறுத்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: எனக்கு அதிகாரபூர்வமாக இது தெரிவிக்கப்பட்டவில்லை. ஆனால் தகவல் வந்துள்ளது. இன்னும் டெஸ்ட் முடியவில்லை. உணர்வுபூர்வமாக இந்த முடிவை எடுத்துள்ளார் மஹ்முதுல்லா. இதுபோன்ற அறிவிப்பு அணியினரிடம் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை ஏற்க முடியாது. ஒருவருக்கு விளையாட விருப்பம் இல்லாவிட்டால் அதனால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் தொடரின் நடுவில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com