ரூ. 1100 கோடி பரிசுத்தொகை: ஜோகோவிச் சாதனை

டென்னிஸ் போட்டிகளில் ரூ. 1100 கோடி பரிசுத்தொகையை ஈட்டிய முதல் வீரர் என்கிற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.
ரூ. 1100 கோடி பரிசுத்தொகை: ஜோகோவிச் சாதனை

டென்னிஸ் போட்டிகளில் ரூ. 1100 கோடி பரிசுத்தொகையை ஈட்டிய முதல் வீரர் என்கிற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனாா். இது விம்பிள்டனில் அவரது 6-வது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன் மூலம் ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 3-வது வீரா் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளாா். உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், விம்பிள்டன் இறுதிச்சுற்றில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை 6-7 (4/7), 6-4, 6-4, 6-3 என்ற செட்களில் வீழ்த்தினாா்.

85 போட்டிகளில் பட்டம் வென்றுள்ள 34 வயது ஜோகோவிச், 150 மில்லியன் டாலர் அதாவது ரூ. 1100 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகையை ஈட்டிய முதல் டென்னிஸ் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

அதிகப் பரிசுத்தொகையை ஈட்டிய டென்னிஸ் வீரர்கள்

ஜோகோவிச் - 151 மில்லியன் டாலர்
ஃபெடரர் - 130 மில்லியன் டாலர்
நடால் - 124 மில்லியன் டாலர்
முர்ரே - 62 மில்லியன் டாலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com