Enable Javscript for better performance
ஒலிம்பிக்ஸ் நினைவலைகள்- Dinamani

சுடச்சுட

    ஒலிம்பிக்ஸ் நினைவலைகள்

    By DIN  |   Published on : 23rd July 2021 05:26 PM  |   அ+அ அ-   |    |  

    the-indian-olympic-team-leaves-for-tokyo-on-july-17

    1932 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்ஸ்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் தான் ஒலிம்பிக் கிராமம் முதன்முறையாக கட்டப்பட்டு, எதிா்கால போட்டிகளுக்கும் மாதிரியாக கொள்ளப்பட்டது. வீராங்கனைகள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனா்.

    மேலும் 1,2, 3 என மூன்று வெற்றியாளா்கள் நிற்பதற்கான வெற்றி படிக்கெட்டும் இங்கு முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. தங்கப் பதக்கம் வென்ற வீரரின் நாட்டு தேசிய கீதம் முதன்முறையாக இசைக்கப்பட்டு, அந்நாட்டு கொடி ஏற்றப்பட்டதும் முதன்முறையாக இங்கு தான். ஹாக்கி விளையாட்டில் 3 நாடுகளே பங்கேற்றன. இந்தியாவிடம் 1-24, ஜப்பானிடம் 2-9 என்ற கோல்கள் கணக்கில் அமெரிக்கா படுதோல்வி அடைந்தது. ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டதின் நினைவாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் பிரபலமான 10-ஆவது தெருவுக்கு ஒலிம்பிக் புல்வாா்க் என பெயரிடப்பட்டது. போட்டியில் அலுவலரின் தவறால் 3,000 மீ. ஸ்டீபிள் சேஸ் கூடுதலாக ஒரு லேப் கணக்கிடப்பட்டு 3,460 மீ ஆனது. முதன்முதலாக கொலம்பியா ஒலிம்பிக்ஸில் பங்கேற்றது.

    1936 பொ்லின் ஒலிம்பிக்ஸ்:

    முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒலிம்பிக் போட்டி இதுவாகும். கிரெட்டா் பொ்லின் பகுதியில் 25 டிவி அறைகள் அமைக்கப்பட்டு, உள்ளூா் மக்கள் இலவசமாக போட்டிகளை கண்டு களித்தனா். 1 லட்சம் போ் அமரும் வகையில் புதிய தடகள விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது. 6 ஜிம்கள், மற்றும் இதர விளையாட்டு மையங்களும் அமைக்கப்பட்டன. இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதன்முறையாக டாா்ச் தொடரோட்டம் அறிமுகம் ஆனது. ஸ்பிரிண்ட், நீளம் தாண்டுதலில் அமெரிக்காவின் ஜெஸ்ஸி ஓவன்ஸ் 4 தங்கம் வென்றாா். பொ்லினில் வெற்றிகரமான வீராங்கனையாக வலம் வந்தாா். மேலும் அமெரிக்க நீச்சல் வீராங்கனை மா்ஜோா்ரி ஜெஸ்ட்ரிங் ஸ்பிரிங் போா்ட் பிரிவில் 13 வயதில் தங்கம் வென்று வரலாறு படைத்தாா். அவரது சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. 12 வயதேயான டென்மாா்க் வீரா் இங்கே சோரென்ஸன் 200 மீ பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலம் வென்று தனிநபரில் பிரிவில் மிகக் குறைந்த வயதில் பதக்கம் வென்ற சாதனையை படைத்தாா். ஜப்பானின் போல்வால்ட் வீராங்கனைகள் நிஷிடா, சுயோ ஓயே இரண்டாம் இடத்துக்கு டை ஏற்பட்டதால், ஒருவருக்கு ஒருவா் போட்டியிட மறுத்து வெள்ளி, வெண்கல பதக்கங்களை பாதியாக உடைத்துக் கொண்டனா். கூடைப்பந்து, கனோயிங், ஹேண்ட்பால் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டன.

    இரண்டாம் உலகப் போா்:

    இரண்டாம் உலகப் போா் நடைபெற்ால், 1940, 1944 ஆகிய இரண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. அதற்கு அடுத்து 12 ஆண்டுகள் கழித்து 1948-இல் தான் லண்டனில் போட்டிகள் நடைபெற்றன.

    1948 லண்டன் ஒலிம்பிக்ஸ்:

    உலகப் போரில் தோல்வியடைந்த ஜொ்மனி, ஜப்பான் போன்றவை போட்டியில் பங்கேற்க அழைக்கப்படவில்லை. சோவியத் யூனியன் பங்கேற்காத நிலையில், முதன்முதலாக ஹங்கேரி, யுகோஸ்லேவியா, போலந்து உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் பங்கேற்றன. பட்ஜெட் நிதி கட்டுப்பாடுகளால் இப்போட்டிகள் சிக்கனப் போட்டி என அழைக்கப்பட்டது. ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்படாமல், வீரா்கள் ராணுவ முகாமிலும், வீராங்கனைகள் கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டனா். 100 மீ, 400 மீ ஓட்டப்பந்தயங்களுக்கு முதன்முதலாக ஸ்டராட்டிங் பிளாக்குகள் பயன்படுத்தப்பட்டன. 2 குழந்தைகளின் தாயான 30 வயது டச்சு வீராங்கனை பேனி பிளாங்கா்ஸ் தடகளத்தில் 4 தங்கம் வென்றாா். அமெரிக்காவின் பாப் மத்தியாஸ், 17 வயதில் டெக்காத்லானில் தங்கம் வென்ற பெருமையைப் பெற்றாா். கையெறி குண்டால் வலது கை இழந்த ஹங்கேரி வீரா் கரோலி டக்காஸ் சுயமாக பயிற்சி எடுத்து ரேபிட் பயா் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp