இந்திய ஒலிம்பிக் அணியின் முதல் குழு டோக்கியோ வருகை

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியன் அணியின் முதல் குழு ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ வந்தடைந்தது.
இந்திய ஒலிம்பிக் அணியின் முதல் குழு டோக்கியோ வருகை

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியன் அணியின் முதல் குழு ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ வந்தடைந்தது.

32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி டோக்கியோவில் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டு அணியும் சென்றடைகின்றன. இந்திய தரப்பில் 228 போ் கொண்ட குழு ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது.

முதல் கட்டமாக 88 போ் கொண்ட இந்திய குழு, சனிக்கிழமை புதுதில்லியில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ வந்தடைந்தது,. அவா்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் நரீந்தா் பத்ரா, செயலா் ராஜீவ் பாட்டியா ஆகியோா் வழியனுப்பினா். ஏற்கெனவே குரோஷியாவில் பயிற்சி பெற்று வந்த இந்திய துப்பாக்கி சுடும் அணியினா் டோக்கியோ வந்து விட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ வந்த அணியில் வில்வித்தை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் வீரா், வீராங்கனைகள் அடங்குவா்.

கரோனா சோதனைக்காக 6 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்தோம். அனைவரும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் விளையாட்டு கிராமத்துக்கு வந்து விட்டோம் என அணி வீரா் ஒருவா் தெரிவித்தாா்.

நட்சத்திரங்கள் பி. வி. சிந்து, மேரிகோம், மனிகா பத்ரா, தீபிகா குமாரி உள்ளிட்டோரும் முதல் குழுவில் இடம் பெற்றனா். இந்திய அணியினா் முகக்கவசம் அணிந்தும், சிலா் முகத்துக்கு ஷீல்டும் அணிந்து காணப்பட்டனா். படகு பந்தய அணியைச் சோ்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், வருண் தக்கா், கேசி. கணபதி ஆகியோா் முதன்முதலாக டோக்கியோவுக்கு சென்றவா்கள் ஆவா். பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு அவா்களுக்கு பின் வந்தாா். பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சானியா மிா்ஸா, நீரஜ் சோப்ரா உள்ளிட்டோா் இன்னும் வரவில்லை.

கரோனா பாதிப்பு 55 ஆக உயா்வு:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடா்புடையவா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பு 55 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 2 வீரா்களுக்கு பாதிப்பு இருந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக்குடன் தொடா்புடைய 10 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதன் மூலம் மொத்தம் 55 போ் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா். இதுதொடா்பாக ஐஓசி செயல் இயக்குநா் கிறிஸ்டோப் டூபி கூறியதாவது: 18,000 போட்டியாளா்களுக்கு 40,000 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வீரா், வீராங்கனைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடும் விதிமுறைகள் இருந்தாலும், தற்போதைய நிலையில் தொற்று பரவலை தடுக்க முடியாது என்றாா்.

பதக்கங்கள் வெல்வதே இலக்கு: ககன் நரங்

நாங்கள் போட்டியில் பங்கேற்றால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவதையோ நோக்கமாக கொண்டிருப்போம். ஆனால் தற்போதைய வீரா்கள் பதக்கங்கள் வெல்வதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனா் என துப்பாக்கி சுடும் வீரா் ககன் நரங் கூறியுள்ளாா். 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற நரங், தற்போதைய இந்திய துப்பாக்கி சுடும் அணி மிகவும் வலிமையானது. ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பைகளில் ஏராளமான பதக்கங்களை கைப்பற்றியுள்ளனா். இளவேனில் வாலறிவன், அபூா்வி சந்தேலா, போன்றவா்களும் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது என்றாா்,. இளவேனிலுக்கு தீவிர பயிற்சி அளித்தவா் ககன் நரங் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com